TNPSC Thervupettagam

R. வைஷாலி – தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை

December 4 , 2023 229 days 240 0
  • இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் (GM) பட்டத்தைப் பெற்ற மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லோபிரேகாட் ஓபன் போட்டியின் போது, 2,500 எலோ புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற இறுதி நிலைத் தகுதி நிபந்தனையினை அவர் நிறைவு செய்தார்.
  • அவரது இளைய சகோதரர் R. பிரக்ஞானந்தா 2018 ஆம் ஆண்டில், அவரது 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
  • கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினைப் பெற்ற முதல் சகோதர-சகோதரி ஜோடியாக வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளனர்.
  • கோனேரு ஹம்பி கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினை வென்ற முதல் இளம் நபர் ஆவார்.
  • 2002 ஆம் ஆண்டில் அவரது 15வது வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினை வென்று உலகின் மிக இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
  • மற்றொரு இந்திய பெண் கிராண்ட்மாஸ்டர் துரோணவல்லி ஹரிகா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்