TNPSC Thervupettagam
March 13 , 2024 128 days 163 0
  • RAD51 புரதமானது புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏவுடன் மிகத் தற்காலிகமாக பிணைக்கப் படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • எனவே, மீண்டும் செயல்படுத்தப்பட்ட மூலங்களிலிருந்து உருவாகக் கூடிய மரபணு நகல்களை RAD51 தடுக்கிறது.
  • ஒவ்வொரு முறையும் ஒரு செல் பிரியும் போது, அதன் டிஎன்ஏ நகலெடுக்கப்படுவதால், இரண்டு சேய் செல்கள் அவற்றின் பெற்றோர் செல்களைப் போலவே ஒரே மரபணு கூறினைக் கொண்டுள்ளன.
  • இதன் பொருள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான முறை டிஎன்ஏ மூலக்கூறின் நகலெடுப்பு என்ற ஓர் உயிர்வேதியியல் அதிசயம் உடலில் நடைபெறுகிறது.
  • சில குறிப்பிட்ட புரதங்களால் மேற்கொள்ளப்படும் ஒரு உயர்-துல்லிய நிலை செயல் பாடான இது புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும் சில சாத்தியமான பிறழ்வுகளிலிருந்து பாதுகாக்கும் அமைப்புகளை உள்ளடக்கியது.
  • டிஎன்ஏவின் ஒரு பகுதி அதிகமாகப் பிரதியெடுக்கப்படும் போது, மூலக்கூறில் பல முறிவுகள் உருவாவதால், புற்றுநோய் தொடர்பான மரபணு மிகவும் அதிகமாக வெளிப் படுத்தப் படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • எனவே, அதிகப் படியான நகலெடுப்பினைத் தவிர்ப்பது "டிஎன்ஏ சேதத்தைத் தடுத்து, புற்றுநோய்கள் பெருக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்