RAD51 புரதமானது புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏவுடன் மிகத் தற்காலிகமாக பிணைக்கப் படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே, மீண்டும் செயல்படுத்தப்பட்ட மூலங்களிலிருந்து உருவாகக் கூடிய மரபணு நகல்களை RAD51 தடுக்கிறது.
ஒவ்வொரு முறையும் ஒரு செல் பிரியும் போது, அதன் டிஎன்ஏ நகலெடுக்கப்படுவதால், இரண்டு சேய் செல்கள் அவற்றின் பெற்றோர் செல்களைப் போலவே ஒரே மரபணு கூறினைக் கொண்டுள்ளன.
இதன் பொருள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான முறை டிஎன்ஏ மூலக்கூறின் நகலெடுப்பு என்ற ஓர் உயிர்வேதியியல் அதிசயம் உடலில் நடைபெறுகிறது.
சில குறிப்பிட்ட புரதங்களால் மேற்கொள்ளப்படும் ஒரு உயர்-துல்லிய நிலை செயல் பாடான இது புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும் சில சாத்தியமான பிறழ்வுகளிலிருந்து பாதுகாக்கும் அமைப்புகளை உள்ளடக்கியது.
டிஎன்ஏவின் ஒரு பகுதி அதிகமாகப் பிரதியெடுக்கப்படும் போது, மூலக்கூறில் பல முறிவுகள் உருவாவதால், புற்றுநோய் தொடர்பான மரபணு மிகவும் அதிகமாக வெளிப் படுத்தப் படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
எனவே, அதிகப் படியான நகலெடுப்பினைத் தவிர்ப்பது "டிஎன்ஏ சேதத்தைத் தடுத்து, புற்றுநோய்கள் பெருக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.