மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் அமைச்சகமானது RAMP (MSME நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப் படுத்துதல்) திட்டத்தின் கீழான 3 துணைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
அதில் பின்வரும் முன்னெடுப்புகளும் அடங்கும்
MSME பசுமை முதலீடு மற்றும் பரிமாற்றத் திட்டத்திற்கான நிதியுதவி (MSE GIFT திட்டம்),
சுழற்சி முறைப் பொருளாதாரத்தின் மேம்பாடு மற்றும் முதலீட்டிற்கான MSE திட்டம் (MSE SPICE திட்டம்) மற்றும்
தாமதமான கட்டணங்களுக்கான இணைய வழி சர்ச்சைத் தீர்வு வழங்கீட்டு MSE திட்டம்.
MSME ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டில் மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பை விரைவுபடுத்துதல், MSME அமைச்சகத்தின் தற்போதைய திட்டங்களின் செயல் திறனை மேம்படுத்துதல் ஆகியவை RAMP திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.