808 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உலக வங்கியின் ஒரு ஆதரவுத் திட்டத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இது "குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்ததுதல் மற்றும் துரிதப்படுத்துதல்" (RAMP - Raising and Accelerating MSME Performance) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
RAMP என்பது 2022-23 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட உள்ள ஒரு புதிய திட்டமாகும்.
நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்தச் செய்வதற்கும் உதவி வழங்குவதற்கும் வேண்டி இது தொடங்கப் பட்டுள்ளது.