TNPSC Thervupettagam

RBI-ன் பங்கு முதலீடு – தேசிய வீட்டுவசதி வங்கி

March 3 , 2019 2096 days 721 0
  • மத்திய அமைச்சரவையானது தேசிய வீட்டு வசதி வங்கியின் பங்கு முதலீட்டுத் தொகையான ரூ.1450 கோடியின் முக மதிப்பினை இந்திய ரிசர்வ் வங்கிக்கு செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் தேசிய வீட்டுவசதி வங்கிச் சட்டம், 1987-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு இந்தப் பணம் செலுத்துதலானது நடைபெறுகிறது.
ஏன்?
  • தேசிய வீட்டுவசதி வங்கியானது (NHB - National Housing Bank) 1986 ஆம் ஆண்டில் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அனைத்து இந்திய நிதியியல் நிறுவனமாகும்.
  • NHB என்பது இந்தியாவில் வீட்டுவசதி நிதியியல் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக முதன்மை நிறுவனமாக செயல்படும் ஒரு தலைமை நிறுவனமாகும்.
  • NHB-ன் உரிமைகளை அரசுக்கு மாற்றுவதன் மூலம் அதன் மொத்த நிதியியல் பங்களிப்பானது வலுப்படுத்தப்படும். அதன் விளைவாக வீட்டுவசதி நிதியியல் நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவியினை அளிக்க முடியும்.
  • NHB-ன் ரிசர்வ் வங்கியிலிருந்து இந்திய அரசாங்கத்திற்கு செய்யப்படும் உரிமை மாற்றமானது RBI-ன் பங்களிப்பை வங்கியியல் ஒழுங்குமுறை மற்றும் NHB-ன் உரிமையாளர் என்ற இரு கூறுகளாகப் பிரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்