TNPSC Thervupettagam

RBI வழங்கும் வட்டி விகிதம்

June 10 , 2022 899 days 478 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக உயர்த்த ஒரு மனதாக வாக்களித்தது.
  • 2022 ஆம் ஆண்டின் மே  மாதத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் அல்லது குறுகிய கால கடன் விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது.
  • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கார்கள் மற்றும் வீடுகளை வாங்குவதற்குக் கடன் பெறுபவர்களுக்கும், மூலதனத்தைத் திரட்ட விரும்பும் MSME நிறுவனங்களுக்கும் கடன் வாங்கும் செலவுகளை அதிகரிக்கும்.
  • கோவிட்-19 மூலம் பாதிப்படைந்தப் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக வழங்கப் பட்ட வசதிகளைத் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தவும் இது முடிவு செய்துள்ளது.
  • வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், பணவீக்கம் மேற்கொண்டுக் குறிப்பிட்ட இலக்கிற்குள் இருப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது
  • நிதிக் கொள்கைக் குழு இந்தியாவில் வட்டி விகித இலக்குகளை நிர்ணயிக்கிறது.
  • இந்தக் குழு ஆண்டுக்கு 4 முறையாவது கூடுகிறது.
  • ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இக்குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்