TNPSC Thervupettagam
March 20 , 2025 11 days 86 0
  • இலண்டனில் உள்ள மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்ட மத்திய வங்கி விருதின் 2025 ஆம் ஆண்டு எண்ணிம மாற்ற விருதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பெற்றுள்ளது.
  • அதன் பிரவாஹ் மற்றும் சார்த்தி எண்ணிம முன்னெடுப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதிற்காக இந்திய ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு அனைத்து உள் செயல்பாடுகளையும் எண்ணிம மயமாக்குவதற்காக என 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 'தேர்' என்ற இந்தி மொழி சொல்லின் மூலம் பெயரிடப்பட்ட சார்த்தி அமைப்பு தொடங்கப்பட்டது.
  • இது ஊழியர்களுக்கு ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து பகிர்ந்து கொள்வதற்கும், ஆவணப் பதிவு நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கும், அறிக்கைகள் மற்றும் முகப்புப் பக்கம் மூலம் தரவுப் பகுப்பாய்வினை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
  • இந்தி மொழியில், 'மென்மையானப் பாய்வு' என்று பொருள்படும் பிரவாஹ் அமைப்பு ஆனது 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தத் தளம் ஆனது, இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களுக்குள் செயலாக்கம் செய்வதற்காக சார்த்தி தரவுத் தளத்துடன் தடையின்றி ஒருங்கிணைத்து, வங்கி சாராத வெளிப்புறப் பயனர்கள் தம் ஒழுங்குமுறை விண்ணப்பங்களை எண்ணிம முறையில் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்