- ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்தின் (RBS) புத்தாக்கம் மற்றும் செயல்பாட்டு மையமான RBS இந்தியா என்ற அமைப்பானது காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செலுத்தியோருக்கான RBS புவித் தலைவர்களுக்கான (RBS Earth Heroes Awards - REHA) விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
- 2019 ஆம் ஆண்டானது REHAவின் 9வது பதிப்பாகும்.
- 2019 ஆம் ஆண்டு விருதுகளுக்கான கருத்துரு, ‘காலநிலை மாற்றம்’ என்பதாகும்.
2019 ஆம் ஆண்டின் RBS புவித் தலைவர்களுக்கான விருதுகளின் வெற்றியாளர்கள் பின்வருமாறு:
-
- பாரத்பூரின் (ராஜஸ்தான்) போலு அப்ரார் கான்: பசுமை வீரர்,
- அசாமின் திம்பேஸ்வர் தாஸ்: கிரீன் வீரர்,
- எலா அறக்கட்டளை (புனே): புவிப் பாதுகாவலர்,
- ஐஸ்வர்யா மகேஸ்வரி (உத்தரப் பிரதேசம்): இனங்களைப் பாதுகாத்தல்,
- சதீஷ் (தமிழ்நாடு): இனங்களைப் பாதுகாத்தல்,
- ஜலால் உத் தின் பாபா (ஜம்மு காஷ்மீர்): ஊக்குவித்தல்,
- பிரமிளா பிசோய் (ஒடிசா): வாழ்நாள் சாதனை.