TNPSC Thervupettagam

RCEP : 15 நாடுகள் ஒப்பந்தம்

November 17 , 2020 1385 days 554 0
  • சீனா மற்றும் இதர 14 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய வர்த்தகத் தொகுதியை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த 15 நாடுகளும் உலக மக்கள் தொகையில் 30% அளவினையும் உலகின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 30% என்ற அளவினையும் கொண்டுள்ளன.
  • உலகின் மிகப்பெரிய வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தம் இதுவாகும்.
  • சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை இருதரப்பு வரி (கட்டணம்) குறைப்பு ஏற்பாட்டை அடைவது இதுவே முதன்முறையாகும்.
  • மேலும், சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒரே வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தத்தில் ஒன்றிணைவது இதுவே முதன்முறையாகும்.
  • இந்த ஒப்பந்தமானது சுங்கக் கட்டணத்தை மேலும் குறைக்கவுள்ளது.
  • மேலும் இது டிரான்ஸ்-பசிபிக் வர்த்தகத்தை விட குறைந்த அளவு விரிவாக்கம் கொண்டதாகும்.
  • டிரான்ஸ் பசிபிக் பங்களிப்பிற்கான விரிவான மற்றும் செயல்பாட்டு ஒப்பந்தம்  (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership - CPTPP) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைப் போல் அல்லாமல், இது தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது தரங்களை நிர்ணயிக்கவில்லை.
  • CPTPP ஆனது சிலியில் 2018 ஆம் ஆண்டில் கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, வியட்நாம், சிங்கப்பூர், பெரு, நியூசிலாந்து, மலேசியா, சிலி, புருனே ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவானது சீனாவின் உற்பத்திப் பொருட்கள் இந்தியாவில் குவிக்கப் படும் என்ற காரணத்தினால் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்