TNPSC Thervupettagam

RE-HAB திட்டம் – அசாம்

December 7 , 2021 992 days 613 0
  • RE-HAB என்ற திட்டமானது தேனீக்களைப் பயன்படுத்தி மனித-யானை மோதல்களைக் குறைக்கிறது.
  • இத்திட்டமானது சமீபத்தில் அசாமில் தொடங்கப்பட்டது.
  • இந்த வேலிகளில் உள்ள தேனீக்கள் மனிதர்கள் வசிக்கும் இடங்களில் யானைகளின் தாக்குதல்களைத் தடுக்கின்றன.
  • இந்த முறையில் யானைகளுக்கு எவ்விதத் தீங்குமின்றி அவை விரட்டப்படுகின்றன.
  • வேலிகள் அமைப்பது அல்லது அகழிகள் தோண்டுவது போன்றவற்றுடன் ஒப்பிடச் செய்கையில் இது மிகவும் செலவு குறைந்ததாகும்.
  • அதே சமயம், இது தேன் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கிறது.
  • RE-HAB என்ற திட்டமானது காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தினால் செயல்படுத்தப் படுகிறது.
  • RE-HAB திட்டமானது காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் தேசிய தேனீக்கள் திட்டத்தின் கீழான ஒரு துணைத் திட்டமாகும்.
  • தேனீக் கூட்டங்களோடு சேர்ந்து தேனீ வளர்ப்புப் பெட்டிகளையும் பயன்படுத்துவது குறித்த ஒரு விழிப்புணர்வையும் பயிற்சியினையும் வழங்குவதற்காக இத்திட்டமானது தொடங்கப் பட்டது.
  • இத்திட்டமானது முதலில் கர்நாடகா மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்