TNPSC Thervupettagam
September 23 , 2024 61 days 161 0
  • 4வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர் சந்திப்பு மற்றும் சந்திப்பு (RE-INVEST) ஆனது குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.
  • இந்த சந்திப்பு ஆனது டெல்லிக்குப் பதிலாக வேறொரு பகுதியில் ஏற்பாடு செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • வங்கிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் உருவாக்காத்திற்காக 386 பில்லியன் டாலர் அல்லது சுமார் 32.45 டிரில்லியன் டாலர் அளவிற்கு நிதி உதவியினை வழங்குவதாக உறுதியளித்து உள்ளன.
  • இந்த நிகழ்வின் போது குஜராத் அதிகபட்ச விருதுகளை வென்றது.
  • ஒட்டு மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் பிரிவிலும், ஒட்டு மொத்தக் காற்றாலை ஆற்றல் உற்பத்தி திறன் பிரிவிலும் குஜராத் முதலிடத்தில் உள்ளது.
  • ஒட்டு மொத்த சூரிய சக்தித் திறனில் குஜராத் மாநிலத்தினைப் பின்னுக்குத் தள்ளி இராஜஸ்தான் மாநிலமானது முதலிடத்தினை அடைந்ததால், குஜராத் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • இந்தப் பிரிவுகளின் கீழ் முதலிடம் பெற்ற மற்ற மாநிலங்கள் இராஜஸ்தான் (இரண்டு விருதுகளைப் பெற்றது), தமிழ்நாடு (இரண்டு) மற்றும் கர்நாடகா (இரண்டு) ஆகும்.
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டும் ஒட்டு மொத்த நீர் மின்னாற்றல் உற்பத்தித் திறனில் முன்னணித்துவத்தினைப் பெற்ற மாநிலங்கள் என்ற பிரிவில் தலா ஒரு விருதினை வென்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்