TNPSC Thervupettagam

REJUPAVE தொழில்நுட்பம்

January 10 , 2024 352 days 291 0
  • எல்லைச் சாலைகள் அமைப்பு ஆனது, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் " REJUPAVE " என்ற உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கீல் சாலைகளை அமைக்க உள்ளது.
  • இது முதன்மையான சாலை ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி சபையின் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CSIR-CRRI) உருவாக்கப்பட்டது.
  • REJUPAVE நிலக்கீல் மாற்றமைப்புகள் ஆனது, ஓர் உயிரி எண்ணெய் சார்ந்த தயாரிப்பு ஆகும் என்ற நிலையில் இது போக்குவரத்தின் போது நிலக்கீல் கலவைகளின் வெப்ப நிலையைத் தக்க வைப்பதோடு, அந்தக் கலவையின் வெப்பமாக்கல் தேவையைக் குறைக்கிறது.
  • இத்தொழில்நுட்பம் ஆனது, ஏற்கனவே 14,000 அடி மற்றும் 18,000 அடி உயரத்தில் உள்ள சேலா சுரங்கப்பாதை மற்றும் LGG-தாம்டெங்க்-யாங்சே சுரங்கப் பாதைகளின் சாலைகள் அமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்