2023-ஆம் ஆண்டில் உலகின் உணவு விநியோகச் சங்கிலியிலிருந்து (global food supply chain) தொழிற்சாலைகளினால் உற்பத்தி செய்யப்படுகின்ற செயற்கை டிரான்ஸ் கொழுப்புகளை (industrially-produced artificial trans-fats) ஒழிப்பதற்காக REPLACE எனும் விரிவானத் திட்டத்தை உலக சுகாதார மையம் (World Health Organization -WHO) துவங்கியுள்ளது.
மதிப்பாய்வு (Review), ஊக்குவிப்பு (Promote), சட்டமியற்றல் (Legislate) மதிப்பீடு செய்தல் (Assess), விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் (Create awareness) மற்றும் செயல்படுத்துதல் (Enforce) எனும் ஆறு செயற்உத்திகளின் (strategic actions) ஆங்கில சுருக்கமே REPLACE என்பதாகும்.
உலக உணவு விநியோகச் சங்கிலியிலிருந்து தொழிற்சாலைகளினால் உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ் கொழுப்புகளின் முழுமையான, உடனடி, மற்றும் நீடித்த நிலையிலான ஒழிப்பினை உறுதி செய்வதற்கு இந்த REPLACE பிரச்சாரமானது அதன் ஆறு உத்திகளில் படிப்படியான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.
டென்மார்க் நாடானது தொழிற்சாலைகளால் உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ் - கொழுப்புகளின் மீது கட்டாய கட்டுப்பாடுகளை விதித்துள்ள உலகின் முதல் நாடாகும்.