மத்திய அரசானது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தல் பயிற்சி (RESET) திட்டத்தினைத் தொடங்கியது.
ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட கல்வியை வழங்கச் செய்வதன் மூலம் அவர்களின் தொழில்முறை மீதான வளர்ச்சியை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பணி அனுபவ/ உள்ளிருப்புப் பயிற்சியினையும் வழங்குவதோடு, பொருத்தமான தொழில்முறை விருப்பத் தேர்விற்கு நன்கு ஏற்றவாறு மாறுவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை அவர்களுக்கு வழங்குகிறது.
RESET திட்டம் ஆனது, விளையாட்டுத் துறையில் தற்போது அதிகம் நிலவி வரும் மனித வள இடைவெளியை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.