இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது RH-560 எனப்படும் ஆய்வு விண்கலம் (sounding rocket) ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது.
இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் புவிப்பரப்பு மேலுள்ள உயரடுக்குகளில் வீசக்கூடிய நடுநிலைக் காற்று, பிளாஸ்மா அயனிகளின் செயல்பாடு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளது.
ஆய்வு விண்கலன்கள் ஒன்று (அ) இரண்டு நிலை கொண்ட திட எரிபொருள் விண்கலங்களாகும்.
இத்தகைய விண்கலன்கள் உயர் வளிமண்டல அடுக்கு பற்றிய ஆய்வு மற்றும் விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப் படுகின்றன.