TNPSC Thervupettagam
March 17 , 2021 1259 days 684 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது RH-560 எனப்படும் ஆய்வு விண்கலம் (sounding rocket) ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது.
  • இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில்  அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • இந்த விண்கலம் புவிப்பரப்பு மேலுள்ள உயரடுக்குகளில் வீசக்கூடிய நடுநிலைக் காற்று, பிளாஸ்மா அயனிகளின் செயல்பாடு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளது.
  • ஆய்வு விண்கலன்கள் ஒன்று (அ) இரண்டு நிலை கொண்ட திட எரிபொருள் விண்கலங்களாகும்.
  • இத்தகைய விண்கலன்கள் உயர் வளிமண்டல அடுக்கு பற்றிய ஆய்வு மற்றும் விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்