கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா நிலநடுக்கோட்டு இராக்கெட் ஏவுதள மையத்திலிருந்து (Thumba Equatorial Rocket Launching Station) இஸ்ரோ அமைப்பின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் (Vikram Sarabhai Space Centre-VSSC) உருவாக்கப்பட்ட RH300 MKII எனும் ஆய்வு இராக்கெட் (sounding rocket) வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தினுடைய கீழ் நிலை அயனி மண்டலப் பகுதிகள் (lower ionosphere regions) மற்றும் நிலநடுக்கோட்டு E பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு RH 3000 MKII ஆய்வு இராக்கெட்டுகளை பயன்படுத்தும் ஆய்வு இராக்கெட் சோதனை திட்டத்தின் (Sounding Rocket Experiment-SOUREX programme) கீழ் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மேற்கொண்டுள்ள ஆய்வின் ஒரு பகுதியாக இந்த இராக்கெட் செலுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் சுழி காந்தப்புல காற்று ஆய்வுக் கருவியினைப் பயன்படுத்தி நிலநடுக்கோட்டு அயனி மண்டலத்தின் மின்னாக்குப் பகுதியில் (dynamo region-80-120 km) உள்ள சுழி காந்தப்புல காற்றினை (neutral wind) அளவிடுவதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.