TNPSC Thervupettagam
March 20 , 2018 2313 days 810 0
  • மாநிலத்தின் பேரிடர் கால மேலாண்மைக்கான தயார்தன்மையை மேம்படுத்துவதற்கும், தன்னுடைய முன்னெச்சரிக்கை சேவை அமைப்பை வலுப்படுத்துவதற்கும்  பிராந்திய ஒருங்கிணைந்த பல் – ஆபத்து   முன்னெச்சரிக்கை அமைப்புடன் (Regional Integrated Multi-Hazard Early Warning System -RIMES) ஒடிஸா மாநில அரசு கூட்டிணைந்து செயல்பட உள்ளது.
  • ஒடிஸா மாநில பேரிடர் தணிப்பு ஆணையம் (Odisha State Disaster Mitigation Authority - OSDMA) மற்றும் பிராந்திய ஒருங்கிணைந்த பல் – ஆபத்து முன்னெச்சரிக்கை   அமைப்பு இணைந்து வறட்சி கண்காணிப்பு மற்றும் பல்வேறுபட்ட இயற்கைப் பேரிடர்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை ஆகியவற்றில் கூட்டிணைவை ஏற்படுத்த உள்ளன.
  • பிராந்திய ஒருங்கிணைந்த பல் – ஆபத்து  முன் எச்சரிக்கை     அமைப்பானது ஏற்கனவே தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (TamilNadu State Disaster Management Authority) இணைந்து செயல்பட்டு வருகின்றது.

பிராந்திய ஒருங்கிணைந்த பல் – ஆபத்து  முன் எச்சரிக்கை   அமைப்பு  

  • RIMES அமைப்பானது ஐநா சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் உலக அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இந்தியா இந்த அமைப்பின் தலைவராக (Chairman) ஆக உள்ளது. 2009 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பானது, ஜூலை 2009ல் ஐ.நா.வில் பதிவு செய்யப்பட்டது.
  • ஆசிய பசுபிக் மற்றும் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள 45 நாடுகளின் கூட்டிணைவால் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகின்றது.
  • இந்த அமைப்பானது தாய்லாந்து நாட்டின் பதும்தானியில் (Pathumthani) அமைந்துள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (Asian Institute of Technology) வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்திலிருந்து (regional early warning centre) செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்