ஹவாயில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் போர் பயிற்சியான பசிபிக் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நாடுகளின் பெரும் பயிற்சியில் (RIMPAC) இந்தியக் கடற்படை இணைந்துள்ளது.
29 நாடுகள், 40 மேற்பரப்பு தளக் கப்பல்கள், மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள், 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
இந்தியக் கடற்படையானது RIMPAC பயிற்சிக்காக INS ஷிவாலிக் எனப்படும் முன்னணி போர்க்கப்பலினை ஈடுபடுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு RIMPAC பயிற்சியின் கருத்துரு, "Partners: Integrated and Prepared" என்பது ஆகும்.