- உலகின் மிகப் பெரிய சர்வதேச கடற்சார் போர்திறப் பயிற்சியான பசுபிக் கடற்கரை நாடுகள் கூட்டுப் போர் பயிற்சியில் (Rim of the Pacific –RIMPAC Exercise 2018) இந்தியா உட்பட 26 நாடுகள் பங்கேற்க உள்ளன.
- 2018 ஆம் ஆண்டிற்கான RIMPAC கூட்டுப் போர் பயிற்சியின் கருப்பொருள் “திறன், தகவமைப்பு, பங்குதாரர்கள்” (“Capable, Adaptive, Partners”).
- இந்தக் கூட்டுப் போர் பயிற்சியானது தென் கலிபோர்னியாவிலும், ஹவாய் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 2018 ஆம் ஆண்டின் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும்.
- பிரேசில், இஸ்ரேல், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகள் முதல் முறையாக இக்கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
- RIMPAC கூட்டுப்போர் பயிற்சியின் இந்தப் பதிப்பில் நியூசிலாந்து கடல் தாக்குதல் படைத்தலைவராக (sea combat commander) செயல்பட உள்ளது.
- இந்தப் பதிப்பில் முதல் முறையாக RIMPAC அமைப்பின் நிறுவனரல்லாத உறுப்பு நாடான சிலி படைத் தலைவர் தலைமைத்துவ பொறுப்பை (component commander leadership position) வகிக்க உள்ளது.
கூட்டுப்போர் பயிற்சியைப் பற்றி
- RIMPAC கூட்டுப் போர் பயிற்சியானது உலகின் மிகப் பெரிய சர்வதேச கடற்சார் போர்த்திறன் குறித்த கூட்டுப்போர் பயிற்சியாகும்.
- இது முதன் முதலாக 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. அன்று முதல் இரு ஆண்டிற்கு ஒரு முறை அமெரிக்காவின் ஹவாய் தீவின் ஹோனோலூலூவில் இரட்டைப் படை ஆண்டுகளின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்படுகின்றது.
- இந்த கூட்டுப் போர் பயிற்சியானது அமெரிக்காவின் பசுபிக் கடற்படை பிரிவால் (United States Navy’s Pacific Fleet) நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. இதன் தலைமையகம் முத்துத் துறை முகத்தில் (Pearl Harbour) அமைந்துள்ளது.
- ஹவாய் தேசிய காவற்படை, கடலோர காவற்படை ஆகியவற்றுடன் இணைந்து இந்த கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.