TNPSC Thervupettagam
June 1 , 2018 2273 days 677 0
  • 2018 ஆம் ஆண்டு பசுபிக் கடலோர நாடுகளிக்கிடையேயான கடற்கூட்டுப் போர் பயிற்சியான ரிம்பக் பயிற்சியில் பங்கேற்க சீன கடற்படைக்கான அழைப்பிதழை அமெரிக்கா திரும்ப பெற்றுள்ளது.
  • பிரச்சினைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள தீவுகளில் சீனா மேற்கொண்டு வரும் தொடர்ந்த சட்ட விரோதமான இராணுவ மயப்படுத்துவதற்கான பதில் நடவடிக்கையாக அமெரிக்கா இந்த அழைப்பினை திரும்பப் பெற்றுள்ளது.

  • 1971ம் ஆண்டு முதலில் நடைபெற்ற பிறகு, தற்போது நடைபெற உள்ள ரிம்பாக் 2019 என்பது இந்த வகைப் பயிற்சியின் 26வது பதிப்பாகும்.
  • RIMPAC (Rim of the Pacific Exercise) கடற்சார் கூட்டுப்போர் பயிற்சியானது உலகின் மிகப்பெரிய சர்வதேச கடல்சார் கூட்டுப் போர் பயிற்சியாகும். இரட்டைப் படை ஆண்டுகளின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்காவின் ஹவாய் தீவின் ஹோனோலூவில் இந்த கூட்டுப்போர் பயிற்சியானது இரு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும்.
  • அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் படையினால் இந்த போர் பயிற்சி நடத்தப்படுகின்றது மற்றும் நிர்வகிக்கப்படுகின்றது. இதன் தலைமையகம் முத்து துறைமுகத்தில் உள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்