மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த உலகளவில் முதல் ஊசி மூலமாக மேற் கொள்ளப் படும் நீண்ட கால ஆண் கருத்தடைக்கான மருத்துவப் பரிசோதனைகளை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது.
ICMR அமைப்பால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் (RISUG) 60 மி.கி புதுமையான மீளக் கூடிய விந்தணு செயல்பாடு தடுப்பு பரிசோதனைகளானது நடத்தப்பட்டது.
ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வழங்கப்படும் மற்ற அனைத்துக் கருத்தடை மருந்துகளுடன் ஒப்பிடும் போது RISUG மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டுள்ளது.