வனவாழ் உயிரிகளின் மேம்பாட்டிற்காக செயல்படும் அரசுசாரா தொண்டு நிறுவனமான (Wildlife NGO) வனஉயிர் பாதுகாப்பு அறக்கட்டளை (Wildlife Conservation Trust) Road kills எனும் கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது.
வனவாழ் உயிரினங்களின் இறப்பை, புவிக் குறியிடங்காட்டியோடு பிணைக்கப்பட்ட புகைப்படங்களாய் (Geo-tagged photographs) பொதுமன்றத்தில் பதிவேற்றம் செய்து அவற்றின் இறப்பை பொது வெளியில் அறிவிக்க குடிமக்களுக்கு இந்த செயலி உதவும்.
இந்த செயலியின் வழியே பெறப்படும் தகவல்களானது, அதிகளவில் வனவிலங்குகளின் மரணம் சம்பவிக்கும் சாலை மற்றும் இரயில்வே பாதைகளின் முக்கிய பகுதிகளை கண்டறிய உதவுவதால், அடையாளம் காணப்பட்ட அக்குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொண்டு வருங்காலத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் எவையும் ஏற்படாமல் தடுப்பதற்கு போதுமான உடனடி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமாகும்.
மேலும் இத்தகு தகவல்களானது எந்தெந்த வனஉயிர் விலங்கினங்கள் குறிப்பிட்ட சாலை மற்றும் இரயில்வே பாதைகளில் அதிகளவில் ஆபத்திற்குள்ளாகின்றன என கண்டறியவும் பயன்படும்.