TNPSC Thervupettagam

RoDTEP திட்டத்தின் விரிவாக்கம்

April 5 , 2024 237 days 194 0
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) மற்றும் ஏற்றுமதி சார்ந்த பகுதிகள் (EOUs) ஆகியவற்றில் உள்ள நிறுவனங்களுக்கு RoDTEP திட்டத்தின் கீழான பலன்கள் கிடைக்கப் பெறும் வகையில் அரசாங்கம் அத்திட்டத்தினை விரிவுபடுத்தி உள்ளது.
  • இந்த துறைகள் ஆனது மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதப் பங்கினை கொண்டுள்ளன.
  • RoDTEP என்பது ஏற்றுமதி செய்யப்பட்டப் பொருட்கள் மீதான சுங்கம் மற்றும் வரிகள் நீக்கம் என்பதைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கடல்சார் பொருட்கள், நூல் இழைகள் மற்றும் பால் பொருட்கள் போன்ற 8,555 பொருட்களுக்கான கூடுதல் வரிகளை திரும்ப வழங்குவதற்கான விகிதங்களை அரசாங்கம் அறிவித்தது.
  • அந்த காலக் கட்டத்தில் அறிவிக்கப்பட்ட விகிதப் பட்டியலில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) மற்றும் ஏற்றுமதி சார்ந்தப் பகுதிகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்