மத்திய அமைச்சரவையானது, 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, ஆடைகள் மற்றும் பல்வேறு வகை துணி வகைகளின் ஏற்றுமதிக்கான மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் சுங்க வரிகளை (RoSCTL) தள்ளுபடி செய்வதற்கான திட்டத்தைத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வேறு எந்த நெறிமுறையின் கீழும் தற்போது தள்ளுபடி செய்யப்படாத அனைத்து வரிகள்/சுங்க வரிகளைத் தள்ளுபடி செய்வதன் மூலம் இது ஜவுளித் துறையை போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றும்.
உள்ளடக்கிய மாநில மற்றும் மத்தியச் சுங்க வரிகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் திரும்பப் பெறப்படாத வரிகளுக்கு RoSCTL வழங்கப்பட்டது.
இது ஆடைகள் மற்றும் பல்வேறு வகை துணி வகைகளுக்கு மட்டுமே கிடைத்தது.