TNPSC Thervupettagam

RRB வங்கிகளின் நான்காம் கட்ட ஒருங்கிணைப்பு

November 10 , 2024 12 days 59 0
  • வட்டார ஊரக வங்கிகளுக்கான (RRBs) நான்காவது சுற்று ஒருங்கிணைப்பை நிதித் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்ற 15 RRB வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
  • 43 ஆக உள்ள அத்தகைய வங்கிகளின் எண்ணிக்கையானது தற்போது 28 ஆக குறைய வாய்ப்புள்ளது.
  • இந்தப் பட்டியலில் அதிகபட்ச எண்ணிக்கையிலான (4) RRB வங்கிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் (தலா 3), மற்றும் பீகார், குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் இராஜஸ்தான் (தலா 2) ஆகியவை அடங்கும்.
  • 2004-05 ஆம் ஆண்டில் RRB வங்கிகளின் கட்டமைப்பு சார் ஒருங்கிணைப்பை மத்திய அரசு தொடங்கியது.
  • இது 2020-21 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று கட்ட ஒருங்கிணைப்பு மூலம் 196 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கையானது 43 ஆகக் குறைக்கப்பட்டது.
  • இந்த வங்கிகள் ஆனது 1976 ஆம் ஆண்டு RRB சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன.
  • கிராமப்புறங்களில் உள்ள சிறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு கடன் மற்றும் பிற வசதிகளை வழங்குவதை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்