ரஷ்யாவானது சாத்தான் 2 என்றும் அழைக்கப்படுகின்ற தனது RS-28 சார்மட் எனப் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
RS-28 சார்மட் என்பது அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்திலான கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையாகும் (ICBM).
நேட்டோ நாடுகளால் பொதுவாக "சாத்தான்" என குறிப்பிடப்படும் சோவியத் காலத்து R-36 ICBM எறிகணைகளுக்கு மாற்றாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய இந்தச் சார்மட் எறிகணையானது மிக தன்னிச்சையாக இலக்குகளை நிர்ணயிக்கக் கூடிய மறு நுழைவு கணைகளாக (MIRV) வடிவமைக்கப்ப ட்டுள்ளது.
இது பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது.
இந்த எறிகணை ஆனது சுமார் 6,200 முதல் 11,180 மைல்கள் வரை செல்லக்கூடியதோடு, இது அமெரிக்கா அல்லது ஐரோப்பா முழுவதும் உள்ள பகுதிகளை நன்கு குறி வைக்க உதவுகிறது.