TNPSC Thervupettagam

RS 28 சார்மட் – ரஷ்யா

December 6 , 2024 16 days 77 0
  • ரஷ்யாவானது சாத்தான் 2 என்றும் அழைக்கப்படுகின்ற தனது RS-28 சார்மட் எனப் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • RS-28 சார்மட் என்பது அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்திலான கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையாகும் (ICBM).
  • நேட்டோ நாடுகளால் பொதுவாக "சாத்தான்" என குறிப்பிடப்படும் சோவியத் காலத்து R-36 ICBM எறிகணைகளுக்கு மாற்றாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய இந்தச் சார்மட் எறிகணையானது மிக தன்னிச்சையாக இலக்குகளை நிர்ணயிக்கக் கூடிய மறு நுழைவு கணைகளாக (MIRV) வடிவமைக்கப்ப ட்டுள்ளது.
  • இது பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது.
  • இந்த எறிகணை ஆனது சுமார் 6,200 முதல் 11,180 மைல்கள் வரை செல்லக்கூடியதோடு, இது அமெரிக்கா அல்லது ஐரோப்பா முழுவதும் உள்ள பகுதிகளை நன்கு குறி வைக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்