இந்திய ரிசர்வ் வங்கியானது நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வுகள் மூலம் மேற்கொள்ளப் படும் பணப்பரிமாற்ற வசதியை (Real-Time Gross Settlement - RTGS) வாரத்தின் அனைத்து நாட்களிலும் அல்லது 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு மாற்றி அமைத்துள்ளது.
இது பொதுவாக மிகப்பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப் படும் ஒரு பணப் பரிமாற்ற முறையாகும்.
இது நிகழ் நேரத்தில் நடைபெறுகின்றது.
RTGS மூலம் மேற்கொள்ளப் படும் பணப் பரிமாற்றத்திற்கான குறைந்தபட்சத் தொகை 2 இலட்சமாகும். மேலும் இதில் பண உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
RTGS முறையில், அனைத்துப் பரிமாற்றங்களும் ஒரு தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப் படுகின்றன.