TNPSC Thervupettagam

RTI வரம்பின் கீழ் J&K வங்கி

December 2 , 2018 2187 days 680 0
  • தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநில சட்டசபையின்படி ஜம்மு & காஷ்மீர் வங்கியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI - Right to Information) வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இது ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையிலான மாநில நிர்வாகக் குழுவினால் (State Administrative Council-SAC) இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த முடிவின் குறிக்கோளானது சிறந்த ஒன்றுபட்ட ஆட்சி முறையை வலுப்படுத்துவதாகும்.
  • இந்த முன்மொழிதலின் படி, இனிமேல் ஜம்மு காஷ்மீர் வங்கியானது பொதுத்துறை நிறுவனமாகக் கருதப்படும்.
  • இது பிற மாநில பொதுத்துறை நிறுவனங்களைப் போல மாநில சட்டசபைக்கு பொறுப்புடையதாகும். மேலும் இது வங்கியின் வருடாந்திர அறிக்கையை மாநில நிதித்துறை வழியாக சட்டமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும்.
  • நாட்டில் ஜம்மு & காஷ்மீர் வங்கி மட்டுமே மாநில அரசால் 59.3% பங்குகளை சொந்தமாகக் கொண்டு செயல்படுகின்ற மாநில அரசால் மேம்படுத்தப்படும் ஒரு வங்கியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்