தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநில சட்டசபையின்படி ஜம்மு & காஷ்மீர் வங்கியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI - Right to Information) வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையிலான மாநில நிர்வாகக் குழுவினால் (State Administrative Council-SAC) இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் குறிக்கோளானது சிறந்த ஒன்றுபட்ட ஆட்சி முறையை வலுப்படுத்துவதாகும்.
இந்த முன்மொழிதலின் படி, இனிமேல் ஜம்மு காஷ்மீர் வங்கியானது பொதுத்துறை நிறுவனமாகக் கருதப்படும்.
இது பிற மாநில பொதுத்துறை நிறுவனங்களைப் போல மாநில சட்டசபைக்கு பொறுப்புடையதாகும். மேலும் இது வங்கியின் வருடாந்திர அறிக்கையை மாநில நிதித்துறை வழியாக சட்டமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும்.
நாட்டில் ஜம்மு & காஷ்மீர் வங்கி மட்டுமே மாநில அரசால் 59.3% பங்குகளை சொந்தமாகக் கொண்டு செயல்படுகின்ற மாநில அரசால் மேம்படுத்தப்படும் ஒரு வங்கியாகும்.