இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI – Food Safety and standards Authority of India) பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதனை உயிரிடீசலாக மாற்றுவதை செயல்படுத்துவதற்காக RUCO (Repurpose used cooking oil) என்னும் துவக்க முயற்சியைத் தொடங்கியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களுக்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தரங்கள் குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டு ஒரு மாதம் கழித்து RUCO துவக்க முயற்சியைத் தொடங்கியுள்ளது.
FSSAI விதிகளின்படி,
மொத்த போலார் கலவைகளின் அதிகப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவானது 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போலார் கலவைகளின் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவுள்ள சமையல் எண்ணெய் உட்கொள்ளுவதற்கு பாதுகாப்பற்றது.
இதைத் தவிர, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் விதிகளின் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது இந்தியாவின் உயிரிடீசல் சங்கம் (BAI – Biodiseal Association of India) மற்றும் உணவு தொழிற்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுகிறது.