TNPSC Thervupettagam
August 17 , 2018 2163 days 806 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI – Food Safety and standards Authority of India) பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து  அதனை உயிரிடீசலாக மாற்றுவதை செயல்படுத்துவதற்காக RUCO (Repurpose used cooking oil) என்னும் துவக்க முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களுக்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தரங்கள் குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டு ஒரு மாதம் கழித்து RUCO துவக்க முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • FSSAI விதிகளின்படி,
    • மொத்த போலார் கலவைகளின் அதிகப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவானது 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • போலார் கலவைகளின் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவுள்ள சமையல் எண்ணெய் உட்கொள்ளுவதற்கு பாதுகாப்பற்றது.
  • இதைத் தவிர, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் விதிகளின் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது இந்தியாவின் உயிரிடீசல் சங்கம் (BAI – Biodiseal Association of India) மற்றும் உணவு தொழிற்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்