RXIL என்பது இந்திய வரவுகள் பரிமாற்றச் சந்தை ஆகும். (Receivables Exchange of India)
சமீபத்தில் மாதாந்திர அளவான ரூ.1000 கோடியை கடந்த முதல் TREDS தளமாக RXIL தளம் உருவெடுத்து உள்ளது.
இத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் (அளவில்) ஏப்ரல் 2020 ஆம் ஆண்டில் ரூ.69 கோடியிலிருந்து மார்ச் 2021 ஆம் ஆண்டில் ரூ.1,105 கோடி வரை அதிகரித்து உள்ளன.
இது நாட்டின் பொருளாதார மீட்சியைக் குறிக்கிறது.
மேலும் கோவிட்-19 பெருந்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மீட்சியடைவதையும் இது குறிக்கிறது.
குறிப்பு
RXIL 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் இந்திய தேசியப் பங்கு சந்தை லிமிடெட்டின் ஒரு கூட்டுக் குழுமமாகும்.
இது TReDS’ என்ற தளத்தினை இயக்குகிறது.
TREDS
TREDS என்பது பல நிதி நிறுவனங்களிடமிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) நிதியளிக்க உதவும் ஒரு மின்னணு தொழில்நுட்பத் தளமாகும்.
TREDS தளத்தில் உள்ள மூன்று முக்கிய பங்கேற்பு அமைப்புகள்,
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (விற்பனையாளர்கள்)
நிதி வழங்குவோர் மற்றும்
கூட்டுறவு நிறுவனங்கள் (வாங்குபவர்) ஆகியனவாகும்.
RBI வங்கியின் கூற்றுப்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே TREDS-தளத்தில் விற்பனையாளர்களாக பங்கேற்க இயலும்.