அமெரிக்காவானது ரஷ்யாவின் S-400 டிரைம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியதற்காக துருக்கியின் மீது தடை விதித்துள்ளது.
S-400 டிரைம்ஃப் ஆனது ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய, நிலப் பகுதியிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஒரு ஏவுகணை அமைப்பாகும்.
இது உலகின் மிகவும் அபாயகரமான செயல்பாடு கொண்ட மற்றும் நவீன அதிக வரம்பு கொண்ட வசதியோடு பொருத்தப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்ட அதி உயரப் பகுதி முனையப் பாதுகாப்பு அமைப்பை விட (Terminal High Altitude Area Defense system - THAAD) சிறந்ததாகக் கருதப் படுகின்றது.
தடைச் சட்டங்களின் மூலம் அமெரிக்காவின் எதிரி நாடுகளைக் கையாளுதல் (Countering America’s Adversaries through Sanctions Act - CAATSA) என்ற சட்டத்தின் முக்கிய நோக்கம் தடை விதிப்பு நடவடிக்கைகளின் மூலம் ஈரான், ரஷ்யா மற்றும் வட கொரியாவை எதிர்ப்பதாகும்.