TNPSC Thervupettagam

S-400 ஏவுகணை கொள்முதலில் இந்தியாவிற்கு விலக்கு

July 22 , 2022 732 days 365 0
  • ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்கியதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
  • பொருளாதாரத் தடைச் சட்டம் (CAATSA) மூலம் அமெரிக்காவின் எதிரி நாடுகளை எதிர் கொள்ளுதல் என்றச் சட்டத்தில் இருந்து இந்தியாவிற்கு தற்போது விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
  • ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்கியதற்காக வேண்டி ஏற்கனவே, துருக்கி அரசானது இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அமெரிக்காவின் தடைகளை எதிர்கொண்டது.
  • ஐந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
  • முதல் அலகானது இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, பஞ்சாப் பகுதியில் மேற்குப் படைப் பிரிவில் பணியமர்த்தப் பட்டது.
  • S-400 என்பது எளிதில் இடம் விட்டு வேறு இடம் மாற்றக் கூடிய நீண்ட தூர வரம்புடைய நிலம் விட்டு வான்வெளியில் பாயக் கூடிய முதல் வான்வழி ஏவுகணை அமைப்பு ஆகும்.
  • இது உலகிலேயே மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இது 400 கி.மீ. தூரம் வரையில் உள்ள பல இலக்குகளை வீழ்த்தும் திறன் கொண்டது.
  • நான்கு வெவ்வேறு வகையான ஏவுகணைகளுடன், இது பார்வைக்குப் புலப்படும் வரம்பிற்கு அப்பாற்பட்ட திறன்களைக் கொண்டுள்ளது.
  • இது 600 கி.மீ. வரம்பில் உள்ள 160 பொருட்களைக் கண்டறிந்து பல இலக்குகளையும் மற்றும் 400 கி.மீ. வரம்பில் உள்ள 72 இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்