TNPSC Thervupettagam
December 20 , 2020 1441 days 612 0
  • அமெரிக்காவானது ரஷ்யாவின் S-400 டிரைம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியதற்காக துருக்கியின் மீது தடை விதித்துள்ளது.
  • S-400 டிரைம்ஃப் ஆனது ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய, நிலப் பகுதியிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஒரு ஏவுகணை அமைப்பாகும்.
  • இது உலகின் மிகவும் அபாயகரமான செயல்பாடு கொண்ட மற்றும் நவீன அதிக வரம்பு கொண்ட வசதியோடு  பொருத்தப்பட்டுள்ளது.
  • இது அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்ட அதி உயரப் பகுதி முனையப்  பாதுகாப்பு அமைப்பை விட (Terminal High Altitude Area Defense system - THAAD) சிறந்ததாகக் கருதப் படுகின்றது.
  • தடைச் சட்டங்களின் மூலம் அமெரிக்காவின் எதிரி நாடுகளைக் கையாளுதல் (Countering America’s Adversaries through Sanctions Act - CAATSA) என்ற சட்டத்தின் முக்கிய நோக்கம் தடை விதிப்பு நடவடிக்கைகளின் மூலம் ஈரான், ரஷ்யா மற்றும் வட கொரியாவை எதிர்ப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்