TNPSC Thervupettagam

S-400 டிரையம்ப் ஒப்பந்தம்

June 5 , 2018 2369 days 715 0
  • இந்திய விமானப் படைக்கு S-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை (S-400 Triumf air defence missile systems) கொள்முதல் செய்வதற்கான 40,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு இந்தியா இரஷ்யாவுடன் விலை தொடர்பான பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது.
  • இரு நாடுகளும் அமெரிக்காவின் தடைகள் மூலம் அமெரிக்காவின் எதிராளிகளை எதிர்க்கும் சட்டத்தின் (Countering America's Adversaries Through Sanctions Act - CAATSA) கூறுகளைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

  • இந்தச் சட்டமானது இரஷ்யாவின் இராணுவ மற்றும் உளவுத் துறை அமைப்புடன் ஒப்பந்தத்தில் பங்கெடுக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களைத் தண்டிக்க முனையும் சட்டமாகும்.
  • 2016 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்ட விரோதமாகத் தலையிட்டதன் காரணமாக கடுமையான சட்டங்களின் கீழ் இரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தடைகளினைப் பிறப்பித்துள்ளது.
  • இந்தியாவானது தன்னுடைய வான் பாதுகாப்பு பொறிமுறையினை வலுப்படுத்துவதற்காக, குறிப்பாக 4000 கிலோ மீட்டர் நீளமுடைய இந்தியா- சீன எல்லை நெடுகிலும் வான் பாதுகாப்பு பொறிமுறையினை வலுப்படுத்துவதற்காக இந்தியா ரஷ்யாவிடமிருந்து நீண்ட தூர வரம்புடைய ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்ய உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யாவானது 400 கிலோ மீட்டர் வரம்பு வரை டிரோன்கள், எதிரிகளின் வானூர்திகள், ஏவுகணைகள் என அனைத்தையும் தாக்கி அழிக்கவல்ல டிரையம்ப் இடைமறிப்பு அடிப்படையிலான ஏவுகணை அமைப்பின் மீது ஓர் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன.
  • S-400 ஏவுகணையானது இரஷ்யாவின் மிகவும் நவீன, நீண்ட தூர, தரையிலிருந்து வான் நோக்கி ஏவக்கூடிய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்