TNPSC Thervupettagam

S & P குளோபல் PLATTS குளோபல் மெட்டல்ஸ் விருது – 2018

May 23 , 2018 2280 days 668 0
  • தேசிய சுரங்கப் பொருள் மேம்பாட்டுக் கழகம் (National Mineral Development Corporation - NMDC Limited) இந்தியாவிலுள்ள மிகப்பெரிய இரும்புத்தாது சுரங்க நிறுவனமான S&P குளோபல் PLATTS குளோபல் மெட்டல்ஸ் விருதினை வென்றுள்ளது. இவ்விருதானது பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமைப் (Corporate Social Responsibility- CSR) பிரிவில் இலண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் NMDCக்கு வழங்கப்பட்டது.
  • இந்த விருது நிறுவப்பட்டதிலிருந்து CSR பிரிவில் விருதைப் பெறும் முதல் இந்திய நிறுவனம் NMDC ஆகும். NMDC-ன் CSR ஈடுபாடானது 2011-2012-ல் ரூ.86 கோடியாக (13.25 மில்லியன் அமெரிக்க டாலர்) இருந்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 190 கோடியாக (30 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரித்துள்ளது.

  • S&P குளோபல் PLATTS நிறுவனமானது ஆற்றல் மற்றும் பொருள்கள் (Commodities) சந்தைகளுக்கான தகவல்கள், திறன்சார்ந்த விலைகள் (Benchmark Prices) மற்றும் பகுப்பாய்வுகள் ஆகியவற்றை வழங்கும் முன்னணி சுதந்திர வழங்குநர் ஆகும். இந்நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ளது.

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்