TNPSC Thervupettagam

S. பீட்டர் அல்போன்ஸ்

July 1 , 2021 1302 days 719 0
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில சிறுபான்மை ஆணையத்தினைத் திருத்தி அமைத்துள்ளார்.
  • இதன் தலைவராக முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் S. பீட்டர் அல்போன்சை நியமனம் செய்துள்ளார்.
  • திரு. அல்போன்ஸ் அவர்கள் 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் தென்காசி தொகுதியின் சார்பாக மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மாநில சிறுபான்மை ஆணையமானது சமயம் மற்றும் மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி  அமைக்கப் பட்டது.
  • மாநில சிறுபான்மை ஆணையத்தினை நிறுவுவதற்கான உத்தரவு 1989 ஆம் ஆண்டின் ஒரு அரசாணை மூலம் தெரிவிக்கப்பட்டது.
  • இது அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள்  தலைமையிலான தி.மு.க அரசினால் அமைக்கப்பட்டது.
  • இதனை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுவதற்காக 2010 ஆம் ஆண்டில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்