SAAF மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நேபாளத்தை 3 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியை நேபாளம் நடத்தியது.
2019 ஆம் ஆண்டின் SAFF (South Asian Football Federation) மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் ஆனது தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த தேசிய அணிகளால் பங்கு கொள்ளப்படுகின்ற வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் 5-வது பதிப்பாகும்.
இந்த போட்டியில் இந்தியா, நேபாளம், மாலத் தீவுகள், பூடான், வங்க தேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கு பெற்றன.