TNPSC Thervupettagam

SAARC நாடுகளின் பண மதிப்பு மாற்றுக் கட்டமைப்பு 2024-2027

July 2 , 2024 16 days 209 0
  • இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசு இணைந்து 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் SAARC நாடுகளுக்கான பண மதிப்பு மாற்றுச் செயல் முறையின் திருத்தப்பட்டக் கட்டமைப்பை அமைக்க முடிவு செய்துள்ளன.
  • இந்த கட்டமைப்பின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியானது பணப் பரிமாற்று வசதியைப் பெற விரும்பும் SAARC நாடுகளின் மத்திய வங்கிகளுடன் இந்த இருதரப்பு இடமாற்று ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்.
  • SAARC பண மதிப்பு மாற்றுச் செயல்முறையானது 2012 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று செயல்பாட்டுக்கு வந்தது.
  • 2024-27 ஆம் ஆண்டிற்கான கட்டமைப்பின் கீழ், இந்திய ரூபாய் மதிப்பில் பணப் பரிமாற்றம் செய்வதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளுடன் தனி இந்தியப் பணமதிப்பு பரிமாற்ற சாளர அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ரூபாய் மதிப்பிற்கான மொத்த நிதித் தொகை 250 பில்லியன் ரூபாயாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அமெரிக்க டாலர் மற்றும் யூரோ மதிப்பில் ஒரு தனியான அமெரிக்க டாலர்/ யூரோ பரிமாற்றச் சாளர அமைப்பின் கீழ் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிதியுடன் பரிமாற்றச் செயல்முறையினை தொடர்ந்து வழங்கும்.
  • இருதரப்புப் பரிமாற்ற ஒப்பந்தங்களில் அந்நாடுகள் கையெழுத்திடுவதற்கு உட்பட்டு, அனைத்து SAARC உறுப்பினர் நாடுகளுக்கும் பண மதிப்புப் பரிமாற்ற வசதி கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்