இந்திய இராணுவம் ஆனது, கிழக்குப் படைப் பிரிவில் பயன்படுத்துவதற்காக EndureAir நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட Sabal-20 எனப்படும் தளவாடப் பயன்பாட்டிற்கான ஆளில்லா விமானங்களைப் பெற்றுள்ளது.
Sabal-20 என்பது பாய்வு வீச்சினைத் தகவமைக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆன ஒரு மின்சார ஆளில்லா ஹெலிகாப்டர் ஆகும் என்பதோடு இது 20 கிலோ எடை உள்ளப் பொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இது மிகவும் நீண்ட தூரத்திற்கான விநியோக நடவடிக்கைகள், அதிக உயரத்திலான நடவடிக்கைகள் மற்றும் துல்லியமான தளவாட வழங்கீடு போன்ற பல பணிகளுக்கு உதவும்.