இஸ்ரோவின் தலைமையிலான SAFE Agromet திட்டம் ஆனது, மாதாந்திர நெல் சாகுபடி கண்ணோட்டச் செயல்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்காக விண்வெளி அடிப்படையிலான வேளாண் வானிலைத் தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது JAXA மற்றும் GISTDA ஆகியவற்றுடன் இணைந்து சரிபார்க்கப்பட்ட விண்வெளி அடிப்படையிலான வேளாண் வானிலை (Agromet) தகவல்களை வழங்கியது.
சுற்றுச்சூழலுக்கான பல்வேறு வகை விண்வெளிப் பயன்பாடுகள் / செயல்பாடுகள் (SAFE) முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டச் செயல்பாடுகளானது 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக ஆசியான் உணவுப் பாதுகாப்பு தகவல் அமைப்பிலிருந்து (AFSIS) இஸ்ரோ நிறுவனம் பாராட்டினைப் பெற்றுள்ளது.