ஆராய்ச்சியாளர்கள் "safeEXO-Cas" எனப்படும் எக்சோசோம் அடிப்படையிலான ஒரு தளத்தை உருவாக்கியுள்ளனர்.
இது குறிப்பிட்ட செல்கள் மற்றும் திசுக்களில் CRISPR/Cas9 மரபணு திருத்தக் கூறுகளின் உள்ளீட்டினைக் கணிசமாக மேம்படுத்துகிறது.
CRISPR/Cas9 என்பது டிஎன்ஏ வரிசையின் சில குறிப்பிட்டப் பகுதிகளை நீக்கி, சேர்த்தல் அல்லது மாற்றுவதன் மூலம் மரபணுவின் பாகங்களைத் திருத்துவதற்கு என்று மரபணு அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்கு உதவுகின்ற ஒரு தனித்துவமான தொழில்நுட்பமாகும்.