இந்திய அணியானது 2021 SAFF சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் (South Asian Football Federation - தெற்காசியக் கால்பந்து கூட்டமைப்பு) 3-0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை வீழ்த்தியது.
இப்போட்டியானது மாலத்தீவின் மாலே நகரிலுள்ள தேசியக் கால்பந்து மைதானத்தில் நடத்தப் பட்டது.
இது இந்தியத் தேசியக் கால்பந்து ஆடவர் அணி பெற்ற 8வது SAFF சாம்பியன்சிப் பட்டமாகும்.
இதற்கு முன்பாக 1993, 1997, 1999, 2005, 2009, 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி SAFF பட்டத்தை வென்றது.
சுனில் சேத்ரி, சுரேஷ் சிங் வங்ஜம் மற்றும் சாஹல் அப்துல் சமாத் ஆகியோர், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கான கோலை அடித்துத் தந்த வீரர்கள் ஆவர்.
சுனில் சேத்ரி (அணித் தலைவர்) அதிக கோல் அடித்தவர் (5 கோல்கள்) என்ற பட்டத்தைப் பெற்றார்.
சுனில் சேத்ரி இப்போட்டியில் தனது 80வது சர்வதேச கோலை அடித்தார்.
இவர் புகழ்பெற்ற லியோனல் மெசியின் கோல் எண்ணிக்கையுடன் தனது கோல் எண்ணிக்கையினைச் சமன் செய்தார்.
இவர் தற்போதையக் கால்பந்து வீரர்களில் சர்வதேச அளவில் அதிகளவு கோல்களை அடித்த 2வது விளையாட்டுவீரராக மாறியுள்ளார்.