TNPSC Thervupettagam

SAFF சாம்பியன்சிப்

October 20 , 2021 1004 days 466 0
  • இந்திய அணியானது 2021 SAFF சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் (South Asian Football Federation  - தெற்காசியக் கால்பந்து கூட்டமைப்பு) 3-0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை வீழ்த்தியது.
  • இப்போட்டியானது மாலத்தீவின் மாலே நகரிலுள்ள தேசியக் கால்பந்து மைதானத்தில் நடத்தப் பட்டது.
  • இது இந்தியத் தேசியக் கால்பந்து ஆடவர் அணி பெற்ற 8வது SAFF சாம்பியன்சிப் பட்டமாகும்.
  • இதற்கு முன்பாக 1993, 1997, 1999, 2005, 2009, 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி SAFF பட்டத்தை வென்றது.
  • சுனில் சேத்ரி, சுரேஷ் சிங் வங்ஜம் மற்றும் சாஹல் அப்துல் சமாத் ஆகியோர், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கான கோலை அடித்துத் தந்த வீரர்கள் ஆவர்.
  • சுனில் சேத்ரி (அணித் தலைவர்) அதிக கோல் அடித்தவர் (5 கோல்கள்) என்ற பட்டத்தைப் பெற்றார்.
  • சுனில் சேத்ரி இப்போட்டியில் தனது 80வது சர்வதேச கோலை அடித்தார்.
  • இவர் புகழ்பெற்ற லியோனல் மெசியின் கோல் எண்ணிக்கையுடன் தனது கோல் எண்ணிக்கையினைச் சமன் செய்தார்.
  • இவர் தற்போதையக் கால்பந்து வீரர்களில் சர்வதேச அளவில் அதிகளவு கோல்களை அடித்த 2வது விளையாட்டு  வீரராக மாறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்