விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) ஆனது, ‘SAKHI’ என்ற பல்பயன்பாட்டு செயலியை உருவாக்கியுள்ளது.
SAKHI என்பது ‘பணியாளர் குழுக்களுக்கு இடையிலான தகவல் தொடர்பிற்கான விண்வெளி சார்ந்த உதவி மற்றும் தகவல் மையம்’ என்பதைக் குறிக்கிறது.
ககன்யான் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் தகவல்களைத் தேடுவது அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது போன்ற பல பணிகளைச் செய்ய இது உதவும்.
இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் செறிவு போன்ற விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களையும் SAKHI செயலி மிக உன்னிப்பாகக் கண்காணிக்கும்.