ஆந்திர மாநில அரசானது ‘ஆந்திராவின் கற்றல் மாற்றத்திற்கு ஆதரவு அளித்தல்’ எனும் திட்டத்தினை (Supporting Andhra’s Learning Transformation – SALT) தொடங்கியுள்ளது.
உலக வங்கியினால் 250 மில்லியன் டாலர் கடன் பெறும் இது, அரசுப் பள்ளிகளில் அடித்தளக் கற்றல் முறையை மாற்றுவதற்கான திட்டத்தினைச் செயல்படுத்துவதன் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளிகளை வலுப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டினை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.